தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், 6 முதல் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26 முதல் பிப்ரவரி 29 வரை திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..
இத்தேர்வு 40 நிமிடங்களுக்கு நடைபெறும் எனவும், மொத்தம் 25 வினாக்கள் இடம் பெற்றிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மாதம் ஒரு முறை 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் தேர்வை நடத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.