• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் திறனறி தேர்வு..!

Byவிஷா

Oct 16, 2023

தமிழகத்தில் நாளை முதல் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் திறனறி தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வினாத்தாள் பெறுவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் உடனே 14417 என்ற இலவச தொலைபேசி சேவையை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.