மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்டம் யங் இந்தியன்சுடன் இணைந்து இன்று ஏப்ரல் முட்டாள் தினத்தினை ஏப்ரல் கூல் தினமாக மாற்றுவதற்காக 5000 பழ மரக்கன்றுகளை மாணவர்கள் மற்றும் மக்களுக்கு கொடுத்தனர். இந்த நிகழ்வினை கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் துவக்கி வைத்து பேசினார். மரங்களின் மூலம் ஆக்சிஜன் மற்றும் பழங்களை தருகிறது. அதிகளவு கார்பனை உறிஞ்சுகிறது. ஆதலால் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்றார். வாத மரம், மாதுளை. சிறு நெல்லி, பெரு நெல்லி, சீதாப் பழம், வெள்ளை, சிவப்பு கொய்யா, மற்றும் தேக்கு மரக் கன்றுகளை இந்நிகழ்வில் கொடுக்’கப்’பட்டது. மாணவர்கள் உற்சாகமாக மரக்கன்றுகளை வாங்கிச் சென்றனர். பெரும்பாலோனோர் மரம் வைத்து நன்றாக வளர்ப்பதாக உறுதியளித்தனர். மரம் வாங்கியவர்களுடைய விபரங்கள் பசுமை மேலாண்மை திட்ட மாணவர்களால் சேகரிக்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் முதல்வர் மற்றும் யங் இந்தியன்ஸ் மதுரை சிறப்பு விருந்தினர்களால் ஆலமரம், அரச மரம் மற்றும் இலுப்பi மரம் நடப்பட்டது. இதனை அமெரிக்கன் கல்லூரியின் பசுமை மேலாண்மை திட்ட இயக்குனர் பேராசிரியர் ராஜேஷ் யங் இந்தியன்ஸ் மதுரை அமைப்பின் தலைவர் ஷெங்கர் லால் துணைத்தலைவர் விக்ராந்த், காலநிலை பருவநிலை மாற்றம் பிரிவின் தலைவர் பொன்.குமார், துணைத்தலைவர்கள் மதுமிதா, சந்தான அய்யப்பன், யோகராஐன் ஒருங்கிணைத்தனர்.
