மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியான ஆச்சி இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் கண்டுபிடித்த பல்வேறு வகையான அறிவியல் பொருட்களையும், தமிழர் வரலாறு குறித்தும், இயற்கை உணவுகள் குறித்தும் தயார் செய்து காட்சிப்படுத்தி இருந்தனர்.
இதில் வித்தியாசமாக விவசாயம் குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் அழிந்து வரும் ஐ.ஆர்.20 வகை நெல் ரகத்தை செம் மண் நிலத்தில் இயற்கை முறையில் விளைவித்து மாணவ மாணவிகள் காட்சிப்படுத்தியது அனைவரின் பாராட்டையும் பெற்றது.
இந்த கண்காட்சியை உசிலம்பட்டி பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இது போன்ற கண்காட்சியை அதிக நாட்கள் நடத்த வேண்டும் எனவும், கிராம புற மாணவ மாணவிகள் இந்த அளவிற்கு ஈடுபடுபாடுகளுடன் அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியுள்ளது. பாராட்டுக்குறியது என பொதுமக்கள் தெரிவித்தனர்.














; ?>)
; ?>)
; ?>)