விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்று வட்டார மக்களின் 30 ஆண்டு கனவாக இருந்த சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி எடுத்ததற்காக சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அரசன் அசோகன் அவர்களுக்கு பாராட்டு விழா சிவகாசியில் நடைபெற்றது.

அதில் சிவகாசி வட்டார காங்கிரஸ் கட்சி சார்பாக வட்டாரத் தலைவர் வைரகுமார் பாராட்டு தெரிவித்து நினைவு பரிசு வழங்கினார். வட்டார காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




