புதுக்கோட்டை திருவப்பூர் பகுதியில் சர்வதேச பராமரிப்பாளர் தினம் மற்றும் உலக மனநல தினத்தை முன்னிட்டு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில் நடைபெற்றது.

இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முதியோர்கள் ஆகியோரை பராமரிப்பாளர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை ஏற்று பேசுகையில்,

மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் மனநல மருந்துகள் மற்றும் முதியோர்களுக்கான அனைத்து மருந்துகளும் இருப்பு வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவே நமது தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கல்விக்கும் மருத்துவத்திற்கும் மட்டும்தான் அதிக முதலிடம் கொடுத்து நிதி ஒதுக்கி இருக்கிறார் ஏனென்றால் கல்வி மனிதனை வாழ்க்கையில் உயர்த்தும் மருத்துவம் உயிரை காக்கும் என்ற அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிறார் என பெருமிதம் தெரிவித்து பேசினார்.













; ?>)
; ?>)
; ?>)