• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் ஆப்த மித்ரா பயிற்சி நிறைவு விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா என்ற பேரிடர் கால நண்பன் தன்னார்வலர்களுக்கு பயிற்சி முகாம் 12 நாட்கள் நடைபெற்றது .நேற்று நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி தன்னார்வலர்கள் 200 பேர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். தேனி மாவட்டத்தில் மழை வெள்ளம், புயல், நிலநடுக்கம், நிலச்சரிவு போன்றவற்றால் ஏற்படும் பேரிடர்களின் போது மீட்பு பணியில் ஈடுபட செஞ்சிலுவைச் சங்கம், நேருகேந்திரா, ஊர்க்காவல் படை, தீயணைப்பு துறை மற்றும் வருவாய் துறை மூலமாக 200 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பயிற்சி ,பேரிடர்களை எவ்வாறு கையாள்வது என்ற ஆப்தமித்ரா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியினை மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், தீயணைப்பு துறை அலுவலர்கள் ,தேசிய பேரிடர் மீட்பு துறை அலுவலர்கள் மற்றும் வெட்தொண்டு நிறுவனம் இணைந்து வழங்கியது. தமிழக அரசு பேரிடர் பயிற்சி பெறும் 200 தன்னார்வலர்களுக்கு ரூபாய் 59 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி தாசில்தார் மணிமாறன், பேரிடர் பாதுகாப்புத்துறை தாசில்தார் அமிர்தா தொண்டு நிறுவன நிறுவனர் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.