• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை…

Byமதி

Oct 18, 2021

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து சி.விஜயபாஸ்கர் வீட்டில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதையடுத்து புதுக்கோட்டையில் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சி.விஜயபாஸ்கர் மனைவி ரம்யா பெயரிலும் வருமான வரித்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

மேலும் விஜயபாஸ்கர் தொடர்புடைய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 43 இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது.

ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கேசி.வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.