
பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – பொறியாளர் பிரேம்குமார் லஞ்சம் பெறும்போது பிடிபட்டார். பொறியாளர் பிரிவில் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரை எடுத்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தலைமை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கோயில் அலுவலகத்தில் பொறியாளர் பிரிவில் பணியாற்றும் அயலக பணி பொறியாளர் பிரேம்குமார் என்பவர் ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜ் தலைமையில் பிரேம்குமார் லஞ்சம் பெறுவதை உறுதி செய்துள்ளனர். ஒப்பந்ததாரர் செந்தில்குமார் ஒட்டன்சத்திரத்தில் 71 இலட்சத்தில் கோயில் சார்பில் திருமண மண்டபம் கட்டு பணி செய்துள்ளார். வேலை முடிந்து 71 லட்சம் ரூபாயை இரண்டு தவணையாக பெற்றுவிட்டு இறுதித்தவனை ஆன 21 லட்சத்தை பெறுவதற்கு பொறியாளர் அலுவலகத்தில் லஞ்சம் கேட்டுள்ளனர். செந்தில்குமார் 18000 ரூபாய் பணத்துடன் பிரேம்குமாருக்கு கொடுத்த போது கையும் களமாக பிடித்துள்ளனர். தொடர்ந்து பொறியாளர் அலுவலகத்தில் வைத்து பிரேம்குமாரை விசாரணை செய்து வருகின்றனர். திருக்கோயில் அலுவலகத்தில் பொறியாளர் ஒருவர் லஞ்சம் பெற்று கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விசாரணைக்குப் பிறகு கைது செய்து அழைத்துச் செல்வதாக டிஎஸ்பி பத்திரிக்கையாளிடம் தெரிவித்தார்.

