திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 மணிநேர நடத்திய சோதனை நிறைவு – பல்வேறு ஆவணங்களை கைப்பற்றப்பட்டதாக முதற்கட்ட தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனராக செல்வசேகர் 2024ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தற்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஏழுமலையான் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ளனர்.
இந்நிலையில் செல்வ சேகர் வசித்து வரும் வாடகை வீட்டில் இன்று காலை 6:30 மணி முதல் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இவர் 2015 முதல் 2022 வரை திருநெல்வேலி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மூன்று மாவட்டங்களில் புவியியல் மற்றும் சுரங்கத்துறையில் பணிபுரிந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று சோதனை நடைபெற்றுள்ளது.
இந்தச் சோதனை காலை 6:30 மணிமுதல் 9:30 வரை 3 மணி நேரம் நடைபெற்றது சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செல்வ சேகரின் திருநெல்வேலி வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






; ?>)
; ?>)
; ?>)
