• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: பள்ளிகளில் உறுதிமொழி ஏற்பு..,

ByS.Ariyanayagam

Jun 12, 2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், பள்ளிகளிலும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சி தலைவர் துர்காமூர்த்தி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

அருகில், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்க்கொடி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜெயந்த ஆகியோர் உட்பட பல அலுவலர்கள் பங்கேற்றனர். இதேபோல திண்டுக்கல் செவாலியர் அகாடமி மெட்ரிக் முதல்வர் ஞானசீலா சீலா, பள்ளி தாளாளர் சேசு ஆரோக்கியம் உட்பட பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.