• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அதிமுக கொடியுடன் காரில் வந்த ஓபிஎஸ் சொன்ன பதில்!!

ByA.Tamilselvan

Apr 22, 2023

அதிமுக கொடியுடன் காரில் வந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, கொடியை பயன்படுத்தக்கூடாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்துள்ளது. இந்நிலையில் தான் நாளை மறுநாள் திருச்சியில் ஓபிஎஸ் மிகப்பெரிய மாநாட்டை நடத்துகிறார். மாநாட்டில் அதிமுக கொடியை ஓபிஎஸ் அணி பயன்படுத்தக் கூடாது என்று அதிமுக எடப்பாடி அணி எச்சரித்து வருகிறது. மீறி பயன்படுத்தினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரித்துள்ளது. ஆனால், அதிமுக கொடிகளை பயன்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர். இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கொடி கட்டிய காரில் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள், அதிமுக கொடியை பயன்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, எந்த நீதிமன்றம் அப்படி சொல்லியிருக்கிறது, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை என்று தெரிவித்தார்.