• Fri. May 3rd, 2024

மனசாட்சிப்படி சிதம்பரம் பதில் சொல்லுங்கள்; பத்தாண்டு பொம்மை ஆட்சி நடத்தினீர்கள்- சிவகங்கை பா.ஜ.க வேட்பாளர் தேவநாதன் பிரச்சாரம்

ByG.Suresh

Apr 4, 2024
சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக தேவநாதன் சிவகங்கை நகர் பகுதியில்  பிரச்சாரம் செய்தார். சிபி காலனிலிருந்து 100 இருசக்கர வாகனத்தில் வரவேற்பு கொடுக்கபட்டு ராமச்சந்திரா பூங்கா, அரண்மனை வாசல், அம்பேத்கர் சிலை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். 

வேட்பாளர் தேவநாதன் பேசும் பொழுது..,

சிவகங்கை பாராளுமன்ற தொகுதியை மீட்டெடுக்க வேண்டிய தேர்தல் 40 ஆண்டுகளாக ஒரே நபரின் கைப்பிடியில் சிவகங்கை மாட்டிக் கொண்டுள்ளது. 1984 முதல் பல்வேறு அமைச்சர்கள் இருந்தும் ஒரு தொழிற்சாலை கூட கொண்டு வரப்படவில்லை என்றார். கார்த்திக் சிதம்பரம் எந்த தைரியத்தில் போட்டியிடுகிறார்? சிவகங்கை தொகுதி அவல நிலைக்கு முக்கிய காரணம் ப. சிதம்பரம் தான் என்றார். இந்த தொகுதியில் 80 சதவீத இளைஞர்கள் வெளி மாவட்டங்களில் வேலை பார்க்கிறார்கள். எனவே தாமரைக்கு வாக்களியுங்கள். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு தொழிற்சாலை கொண்டு வந்து 10,000 க்கும் மேற்பட்டவேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவேன் என்றார். பாராளுமன்ற தொகுதி ஒவ்வொரு பகுதிக்கும் அலுவலகம் அமைப்பேன். பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி தருவோம். வீரமங்கை வேலுநாச்சியாருக்கு சிறப்பு சேர்ப்போம். கோவில்கள் நிறைந்த தொகுதியை சுற்றுத்தலமாக மாற்றுவோம். எனவே தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றார். இந்த மண்ணில் இருந்து வந்த நீங்கள் எப்படி ஐரோப்பிய பெண்மணி சோனியாவுக்கு துணை போகிறீர்கள்? மனசாட்சிப்படி சிதம்பரம் பதில் சொல்லுங்கள் என்றார். பத்தாண்டு பொம்மை ஆட்சி நடத்தினார்கள். அவர்களை எதிர்த்து நரேந்திர மோடி மராட்டிய வீரர் சிவாஜியாக மறு உருவம் பெற்று வந்துள்ளார். மோடியின் கரத்தை வலுப்படுத்த தாமரைக்கு வாக்களியுங்கள் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *