• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் அருகே கார் வழக்கில் மேலும் ஒருவர் கைது..,

ByS.Ariyanayagam

Feb 10, 2026

திண்டுக்கல் அருகே பிட்டிங் கார் வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் அருகே கார் விபத்துக்குள்ளானது. குறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரின் உரிமையாளர் பொள்ளாச்சியை சேர்ந்த முத்துக்குமார், இவர் காரை பார்த்திபன் என்பவரிடம் ரூ.70 ஆயிரத்திற்கு அடமான வைத்திருந்தார். அது பல கட்டமாக திண்டுக்கல் ரவுடி கும்பலை சேர்ந்த ஹாரிஸ் முகமது என்பவரிடம் அடமானமாக வந்துள்ளது காரின் உரிமையாளர் முத்துக்குமார் பணத்தை கொடுத்து காரை திருப்பி கேட்டதற்கு காரை திருப்பி தர முடியாது மீறி கேட்டால் காரை கொலை வழக்கில் சேர்த்து விடுவதாக மிரட்டியதாக காரின் உரிமையாளர் புகார் தெரிவித்தார்

இதுகுறித்து நகர் டிஎஸ்பி.கார்த்திக் தலைமையிலான போலீசார் பார்த்திபன், யாசின், ஹாரிஸ் முகமது, அல்-ஆசிக், தாரிக்அன்வர் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

மேலும் இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான திண்டுக்கல் பேகம்பூர், யூசிபியா நகரை சேர்ந்த ரபீக்ராஜா (எ) குட்ட ரபீக்(24) என்பவரை DSP.கார்த்திக் தலைமையிலான போலீசார் கைது செய்து தாடிக்கொம்பு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.