• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மற்றொரு பூமி, சனியின் ஆறாவது துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம் (மார்ச் 25, 1655).

ByKalamegam Viswanathan

Mar 25, 2025

டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் 25, 1655ல் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியைத் தவிர மற்ற கோள்களின் நிலவுகளில் ஐந்தாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலவு இதுவாகும். டைட்டன் (அல்லது சனி VI) ஆனது சனியின் நிலவுகளின் மிகப்பெரியது ஆகும். அடர்த்தியான வளிமண்டலத்தை கொண்டுள்ளதாக அறியப்படும் ஒரேயொரு இயற்கைத் துணைக்கோள் இதுவாகும். மேலும் பூமியைத் தவிர மேற்பரப்பில் நிலையான நீர்ம பரப்புகள் உள்ளதற்கான ஆதாரங்கள் உள்ள ஒரே துணைக்கோள் டைட்டன் ஆகும். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காசினி செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படங்களிலிருந்து டைட்டனில் ஒரு நதி இருப்பது கண்டறியப்பட்டு குட்டி நைல்நதி எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. டைட்டன் சனியின் ஆறாவது துணைக்கோள் ஆகும். அடிக்கடி கோளைப் போல உள்ளதாக விவரிக்கப்படும் இது பூமியின் நிலவை விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது.

டைட்டன் சூரியக் குடும்பத்தில் வியாழனின் துணைக்கோள் கனிமீட்டிற்கு அடுத்த இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும். மேலும் இது கொள்ளவைப் பொறுத்து மிகச்சிறிய கோளான புதனை விட பெரியது, எனினும் புதனின் நிறையில் பாதியளவே டைட்டன் கொண்டுள்ளது. டைட்டன் முதன்மையாக நீர், பனிக்கட்டி, பாறை பொருட்களால் உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு காசினி-ஹைஜென்ஸ் செயற்கைக்கோளின் ஆராய்ச்சிக்கு பின்பே அதன் அடர்த்தியான வளிமண்டலதிற்கு அடியில் துருவ பகுதிகளில் திரவ ஹைட்ரோகார்பன் ஏரிகள் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதன் மேற்பரப்பு இளம் நிலவமைப்பை கொண்டதாகவும் சில மலைகள் மற்றும் விண்கல் பள்ளங்களுடன் அதிக அளவில் சமதளபரப்பை கொண்டது என அறியப்படுகிறது. இது அதி உறைநிலை எரிமலைகளையும் கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கோளானது அதிக அளவில் நைட்ரஜனை கொண்டுள்ளதால் இதன் மேற்பரப்பில் மீத்தேன் மற்றும் ஈதேன் மேகங்கள் மற்றும் நைட்ரஜன் நிறைந்த கரிம பனிப்புகை அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் இது காற்று மற்றும் மழை உட்பட பல மாறுபட்ட காலநிலைகளை கொண்டுள்ளது.

எனவே இது பூமியை போல குன்றுகள், ஆறுகள், ஏரிகள், கடல்கள் (திரவ மீத்தேன் மற்றும் ஈத்தேன்), மற்றும் கழிமுக பூமி போன்ற மேற்பரப்பு அம்சங்களை கொண்டுள்ளது, மற்றும் பூமியில் இருப்பது போன்று பருவகால வானிலைகளையும் கொண்டுள்ளது. அதன் திரவங்கள் மற்றும் அடர்ந்த நைட்ரஜன் வளிமண்டலத்தில் மீத்தேன் சுழற்சி பூமியின் தண்ணீர் சுழற்சியை ஒத்து குறைந்த வெப்பநிலையில் நடைபெறலாம் என கருதப்படுகிறது. இதிலுள்ள இந்த அம்சங்கள் காரணமாக இது நைட்ரஜனை அடிப்படையாக கொண்ட உயிரினங்கள் இங்கு தோன்றி இருக்கலாம் அல்லது அதற்கான வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே இது சூரிய குடும்பத்தில் அதிகமாக கவனிக்கப்படும் நிலவுகளில் ஒன்றாக இது உள்ளது.

டச்சு வானியலாளர் கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் மூலம் மார்ச் 25, 1655 அன்று டைட்டன் கண்டுபிடிக்கப்பட்டது. 1610 இல் வியாழனின் நான்கு பெரிய சந்திரன்கள் பற்றிய கலிலியோவின் கண்டுபிடிப்பு மற்றும் தொலைநோக்கி தொழில்நுட்பம் ஆகியவற்றால் கவரப்பட்ட அவர் தனது சகோதரர் இளைய கான்ச்டன்டிஜின் ஹைஜென்ஸ் உதவியுடன் 1650ல் தனது முதல் தொலைநோக்கியை உருவாக்கினார். அதன் மூலம் இவர் டைட்டனை கண்டறிந்தார். இது சனிக்கோளின் முதலாவது கண்டறியப்பட்ட கோளாகும். இவர் முதலில் இதற்கு சனியின் நிலா என பொருள் படும் சட்டர்னி லூனா என்று பெயரிட்டார். அதன் பின்னர் சனியின் ஏழு செயற்கைக்கோள்கள் கண்டறியப்பட்ட பின் ஜான் ஹெர்ச்செல் (சனியின் வேறு இரு கோள்களை கண்டறிந்தவர்) 1847 ஆம் ஆண்டு வெளியிட்ட புத்தகத்தில் டைட்டன் என்ற பெயரை முதன் முதலாக பயன்படுத்தினார். கிரேக்க புராணத்தின் படி இப்பெயரானது கையா மற்றும் யுரேனசு ஆகியோரின் குழந்தைகளான குரோனசு மற்றும் அவனது சகோதர, சகோதரிகளை குறிக்கும் இவர்கள் பழம்பெரும் பொற்கால ஆட்சி போது சக்திவாய்ந்த தெய்வங்களாக இருந்தனர் என குறிப்பிடப்படுகிறது.

டைட்டன் ஒரு முறை சனியை சுற்றிவர 15 நாட்கள் மற்றும் 22 மணி நேரம் எடுத்துகொள்கிறது. இது சனியை சுற்றிவரும் வாயு கோள்கள் மற்றும் பிற துணைக்கோள்களுக்கு பொதுவானதாகும்.எனவே இது சனியின் சனியின் ஒத்த அலை சுழற்சிக்கு கட்டுப்பட்டுள்ளது. அதன் சுற்றுப்பாதையின் வட்டவிலகல் 0.0288 ஆகவும் 0,348 டிகிரி சாய்ந்த சுற்றுப்பாதையை கொண்டுள்ளது. இதன் மேற்பரப்பு வெப்பநிலையானது 94 கெல்வின் (−179.2 °C) என்ற மிகக்குறைந்த வெப்ப நிலையை கொண்டுள்ளது. இதனால் அதன் மேல்வளிமண்டலத்தில் 1 சதவீத பனிக்கட்டி காணப்படலாம் என கருதப்படுகிறது. அதிலுள்ள மீதேன் காரணமாக பசுமை இல்ல விளைவு மூலம் அதன் வெப்பநிலை உட்புறத்தில் சிறிதளவு அதிகமாக உள்ளது எனவும் அதன் தூசு மேகங்கள் காரணமாக அது அனைத்து வெப்பத்தையும் திருப்பி அனுப்பும் எனவே அது உட்புறத்தில் இன்னுமும் குளிராக இருக்கும் எனவும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.