• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பத்மஸ்ரீ விருதை புறக்கணித்த மேலும் ஒரு பிரபலம்!

இன்று இந்தியாவின் 73வது குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2022ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் மேற்கு வங்க பழம்பெரும் பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியை, விருது பெற்றுக் கொள்வதற்காக மத்திய அரசு அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். அவரது மகள் விருது பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தார்.

ஆனால் சந்தியா முகர்ஜி பேசும் போது 90 வயதில், சுமார் எட்டு தசாப்தங்களுக்கும் மேலாக பாடிக் கொண்டிருக்கிறேன். தள்ளாத வயதில் வாழ்க்கையுடன் தற்போது போராடிக் கொண்டிருக்கும் எனக்கு பத்மஸ்ரீ வழங்கப்படுவது நட்சத்திர அந்தஸ்துள்ள பாடகியை இழிவுபடுத்துவதாக பொருள் எனத் தெரிவித்துள்ளார்.

இதே போல் , முகர்ஜியின் நீண்டகால ஒத்துழைப்பாளர் மற்றும் புகழ்பெற்ற பாடகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை வாய்ந்த ஹேமந்தா முகோபாத்யாயும் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருது இரண்டையும் நிராகரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.