• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி.. பரபரப்பு தகவல்

ByA.Tamilselvan

Nov 19, 2022

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்புளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இன்சாப் கட்சி (பிடிஐ) கடந்த மாத இறுதியில் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து இஸ்லாமாபாத் நோக்கி பேரணியை தொடங்கியது. இந்த பேரணியில் பங்கேற்க கடந்த 3-ந்தேதி பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா பகுதியில் மர்ம நபர் ஒருவர் இம்ரான்கானை துப்பாக்கியால் சுட்டார். இதில் அவரது வலதுகாலில் குண்டு பாய்ந்த நிலையில் காயங்களுடன் உயிர் தப்பினார். இதனிடையே அரசுக்கு எதிரான இந்த பேரணியில் தான் மீண்டும் பங்கேற்க இருப்பதாக இம்ரான்கான் கூறிவருகிறார். பேரணி இந்த மாத இறுதியில் இஸ்லாமாபாத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் உளவுத்துறை தகவலின்படி இம்ரான்கான் மீது மீண்டும் கொலை முயற்சி நடக்க வாய்ப்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.