• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மேலும் 14 தமிழக மீனவர்கள் கைது – தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்

Byமதி

Dec 21, 2021

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களையும், 8 விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் சிறை பிடித்தனர்.

இந்நிலையில், யாழ்ப்பாணம் அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த மேலும் 14 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். மீனவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த 48 மணி நேரத்தில் தமிழக மீனவர்கள் 69 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ கிராமங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.