• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பள்ளியில் ஆண்டு விழா

ByKalamegam Viswanathan

Mar 15, 2025

சோழவந்தான் சி.எஸ். ஐ. தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியை பிரேம்குமாரி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் இராபின்சன் செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார். பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன், வார்டு கவுன்சிலர்கள் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்தியபிரகாஷ், கொத்தாலம் செந்தில் வேல் முன்னாள் மாணவி சென்னை தென்னக ரயில்வே டிஆர்எம் ஆபீஸ் சூப்பர்ரெண்ட் ஸ்ரீநிதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள்.

முன்னாள் தலைமை ஆசிரியர் பிராங்கிளின் நினைவாக முன்னாள் ஆசிரியை ராஜாமணி முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க பதக்கமும், இரண்டாவது மூன்றாவது மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோவில் முன்னாள் பரம்பரை நிர்வாக அறங்காவலர் ஏ என் ஆதிமூலம் பிள்ளை சரஸ்வதி அம்மாள் அவர்கள் நினைவாக தேவிகாபெருமாள் வெள்ளி பதக்கங்களும், திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு எம். எஸ். நீலகண்டன் பிள்ளை ஜெயந்தி அம்மாள் நினைவாக எஸ் என்.சத்திய பிரகாஷ் ஆகியோர் வழங்கினார்கள். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், ஆசிரியர் பயிற்சிநர் சரண்யா ,ஜெயலட்சுமி, அனைத்து ஓய்வூதியர் நல சங்க பொருளாளர் பால் ஜோசப் ஆகியோர் பேசினார்கள். ஆசிரியை திவ்யா நன்றி கூறினார்.

ராயபுரம் ஆர்சி பள்ளி தலைமை ஆசிரியை பணிமாதா, சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியர் வின்சென்ட், ஆசிரியைகள் பிரேமா அன்னபுஷ்பம், வனிதா சாந்தகுமாரி , கிறிஸ்டி ஜெயஸ்டார், நிர்வாக ஆசிரியை அனிதா, சத்துணவு அமைப்பாளர் பொறுப்பு ராமேஸ்வரி, உதவியாளர்கள் மலர்வழி, சரஸ்வதி,பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சி நடந்தது.