அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததால் கடந்த ஆண்டு மார்ச் மாதம், ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. எனவே முன்னிட்டு, பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அப்படித்தான், அண்ணா பல்கைலக்கழக இளநிலை மற்றும் முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து, 2020ம் ஆண்டுக்கான நவம்பர், டிசம்பர் மற்றும் 2021ம் ஆண்டுக்கான ஏப்ரல், மே மாதங்ளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றன. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தது. தேர்வு முடிவுகள் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
மேலும், தேர்வு முடிவுகளை, https://auexams2.annauniv.edu/result/index.php மற்றும் https://auexams3.annauniv.edu/result/index.php ஆகிய வெப்சைட்களில் பார்க்கலாம். பல மாணவர்களும் ஒரே நேரத்தில், ரிசல்ட் பார்க்க முற்பட்டதால், இணையதளம் சிறிது நேரம் முடங்கியது. எனவே சிறிது நேரம் காத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவருமே தேர்ச்சி பெற்றிருப்பதால் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்று தேர்வுகள் கட்டுப்பாட்டுத்துறை அறிவித்துள்ளது.