• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

விக்ரம் பட இசையில் கலக்கியிருக்கும் அனிருத்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “விக்ரம்”.. ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர் மற்றும் க்ளான்ஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தில் இடம்பெற்று பாடல்கள் எண்ணிக்கை குறித்து தகவல் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. படத்தில் மொத்தம் 3 பாடல்கள் எனவும், 3 தீம் மியூசிக் எனவும் கூறப்படுகிறது. விரைவில் முதல் பாடல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதால் இசை மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது. விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் தேதியை வரும் மார்ச் 14 – ஆம் தேதி காலை 7 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.