மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார்.செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளி கழுகை ஏந்தி இருந்தார்.
அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்ப்பட்டது. தாகம் எடுத்தது. அப்போது ஒரு பாறையிலிருந்து நூல் இழைபோல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது.
ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருக சென்றார்.
ராஜாளி வேகமாக பாய்ந்து சென்று குவளையைத் தட்டிவிட்டது. மீண்டும் மீண்டும் வெள்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது.
ராஜாளியின் அடாவடி. இந்த இரண்டாலும் செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது.
வாளால் ராஜாளியை வெட்டினார். ராஜாளி துடி துடித்துக் கொண்டு இருந்தது.
மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார். துடி துடித்துக் கொண்டு இருந்த ராஜாளி மறுபடியும் பாயந்து வந்து குவளையை தட்டி விட்டது.
செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத கோபம் பீறிட்டெழுந்தது. ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார்.
இப்போது மேல் இருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது. கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் யூகித்தார்.
குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால் அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது.
அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்தான் உணர்ந்து கொண்டார்.
கீழே இறங்கி வநத செங்கிஸ்கான், செத்துக்கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார்.
இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளை இட்டார்.
செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவு அமைக்கப்பட்டது.
அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப் பட்டது.
மற்றொரு சிறகில், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது.
ஆம்.,நண்பர்களே..
எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் புத்திசாலிதனமாக ஈடுபட்டால் எதிலும் வெற்றிதான்.
அதே சமயம் அழிவுக்கு காரணம் அவசரமும், ஆத்திரப்படுதலே ஆகும்.
எல்லாமே நன்றாக அமைய ஆத்திரப்படாமலும் அவசரப்படமாலும் இருந்தால்நல்லது.