• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

புற்று நோயாளிகளுக்கு ஆண்ட்ரியாவின் உதவி!

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி, தற்போது தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை ஆண்ட்ரியா. ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் தன்னை நிரூபித்து உள்ளார் ஆண்ட்ரியா.சமீபத்தில் புஷ்பா படத்தில் அவர் பாடிய பாடல் வைரல் ஆனது குறிப்பிடதக்கது .

தற்போது இவர் புற்று நோயாளிகளுக்காக முடி தானம் செய்துள்ளார். இவர் செய்த இந்த செயலால், ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தன்னுடைய கேரியரை தவிர, சமூக அக்கறை கொண்ட விஷயங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சில சமயம் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் யோகா செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டு அதன் முக்கியத்துவத்தை கூறி வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. தான் ஸ்லிம்மாக இருக்கும் காரணத்தையும் அவர் ஃபாலோ செய்யும் டயட் ப்ளானயும் தன் ரசிகர்களுக்காக சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்!

இந்நிலையில், புற்று நோயாளிகளுக்காக நடிகை ஆண்ட்ரியா தனது முடியை தியாகம் செய்துள்ளார். இது குறித்தான விளம்பரத்தில் முடியை டொனேட் செய்வதில் உள்ள முக்கியத்துவத்தையும், மற்றவர்கள் ஏன் இதை செய்ய ஆர்வம் காட்ட வேண்டும் என்ற விளக்கத்தையும் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. முழு முடியை கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் முடியில் இருந்து ஒரு சிறிய பகுதியை கொடுத்தாலே போதும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ஆண்ட்ரியா. இவ்வாறு பொது சேவையில் ஈடுபட்டு வருவது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர் செய்து வரும் இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் இவருக்கு பல பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.