பல விதமான உணவுகளை சாப்பிட்டு யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர் இர்பான். உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார் இர்பான். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்த புகைப்படத்தையும், தனது திருமணம் நான்கு மாதத்தில் நடைபெறும் என்றும் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் இர்பான் திருமணத்தை பற்றி ஏதுவும் கூறாமல் இருந்துள்ளார்.
இதனிடையே தற்போது இர்பான் வெளியிட்டு இருக்கும் வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதில், என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளிவைக்கவில்லை. என்னுடைய எண்ணத்திற்கு ஏற்றவாறு சரியாக பொருந்தவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான். கடைசி வரையும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால், எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்திவிட்டேன், என்று கூறியுள்ளார்!