• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம்

ByP.Thangapandi

Feb 11, 2025

உசிலம்பட்டி அருகே சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு ஆண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயககனூர் ஊராட்சிக்குட்பட்ட நோட்டம்பட்டியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பின்பு கோவில் புனரமைப்பு செய்து ஆண்டிச்சாமிக்கு கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று மதுரை யதிராஜன் தலைமையில் சிவாச்சாரியர்கள் கோவில் கருவறையில் உள்ள ஆண்டிச்சாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.

பின்பு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு ஆண்டிச்சாமி சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர். அதனைத் அன்னதானம் பொதுமக்களுக்கு நடைபெற்றன.