• Thu. Apr 25th, 2024

மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

ByA.Tamilselvan

Oct 9, 2022

திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் …தி.மு.க.வின் தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கும் வாழ்த்துகள். அவர்கள் பணி சிறக்கட்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *