தேனி மாவட்டம் தேனி பழனிசெட்டிபட்டி கேஎம்சி நகரில் திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகம் இன்று ஜூன் 21 திறந்து வைக்கப்பட்டது.
தேனி வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரா.அருள் வாசகனின் முயற்சியால் அவரது சொந்த இடத்தில், அன்பகம் என்ற பெயரில் திமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட செயலாளரும், தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு அன்பகம் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில் குத்து விளக்கினையும் ஏற்றி வைத்தார்.


அப்போது, “முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக… தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் வாழ்க… துணை முதலமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகழ் ஓங்குக” என்ற முழக்கங்களை கழக உடன்பிறப்புகளோடு எம்பி தங்க தமிழ்செல்வனும் முழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தேனி வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அஜிப்கான், போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன், தேனி நகர செயலாளர் பாலமுருகன்,தேனி நகராட்சி துணை சேர்மன் செல்வம், போடி நகர செயலாளர் புருஷோத்தமன், வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி, பூதிபுரம் பேரூராட்சி சேர்மன் கவியரசு, மார்க்கையன் கோட்டை பேரூராட்சி சேர்மன் ஓ.எ.முருகன், வடக்கு ஒன்றிய அஜித் பாண்டி, வீரபாண்டி பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், தேனி வடக்கு மாவட்டம் மகளிர் அணி அமைப்பாளர் பவானி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செல்லத்துரை பழனிசெட்டிபட்டி அவைத்தலைவர் ஜோதிராம்,துணைச் செயலாளர் இளம் வழுதி, தேனி பழனிசெட்டிபட்டி பேரூர் கழக நிர்வாகிகள் வழக்கறிஞர் கண்ணதாசன், பிரபாகர்,தேனி வடக்கு மாவட்டம் அமைப்பு சாரா ஓட்டுனர் அணியின் துணைத் தலைவர் கருப்புசாமி, ஹரி, சரவணன், மோகன், சுதாகரன், கார்த்திக் கண்ணன், சிசிடிவி வினோத் மற்றும் தேனி வடக்கு மாவட்ட நிர்வாகிகள், அணி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


இந்த புதிய முயற்சிக்காக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அருள் வாசகனை எம்.பி. தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.