• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இஸ்ரோவில் இலவசமாக படிக்க ஒர் வாய்ப்பு

ByA.Tamilselvan

May 24, 2022

விண்வெளி குறித்த படிப்புகளும் ,விண்வெளி நிலையத்தில் வேலைக்குச்செல்லும் வாய்ப்பு தற்போது கவனம் ஈர்த்துவருகிறது. இன்றைய இளம் தலைமுறையினரிடம் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.
ராக்கெட் ஏவுதல்,காலநிலை தகவல்கள் சேகரித்தல்,ராக்கெட் கட்டுமானம் உள்ளிட்ட பல துறை குறித்து இந்த இணையவழி கல்வியில் அறிந்து கொள்ள முடியும்
.டேஹ்ராடூனில் இருக்கும் இஸ்ரோவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (ஐஐஆர்எஸ்), பள்ளி மாணவர்களுக்காக “விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் மேலோட்டம்” என்கிற தலைப்பில் அனைவருக்குமான ஓர் இணையவழி படிப்பை (MOOC) அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதே இந்த ஆன்லைன் பாடத்திட்டத்தின் நோக்கம். இந்த இணைய வகுப்பில் இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர்கள் விண்வெளி தொழில்நுட்பம் குறித்து உரையாற்ற இருக்கின்றனர்.விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களையும், அதன் முழுவீச்சையும் இளம் தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் பள்ளி மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.
இந்த இணைய வகுப்பு ஜூன் 06, 2022 முதல் ஜூலை 05, 2022 வரை நடக்க இருக்கிறது.

மேலும் கூடுதல் தகவல்களுக்கு: https://isat.iirs.gov.in/specialcourse/aboutmooc.php