கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(68). இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும், வித்தியாசமான முறையில், குதிரையில் வந்து ராஜா, ஏர் கலப்பையுடன் விவசாயியாக, சவப்பெட்டியுடன் வந்தும் பல்வேறு வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல்கள் என இதுவரை 48 முறை போடியிட்டுள்ளார். 1997 ல் நடந்த கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து தோல்விகளை சந்தித்தாலும், பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கக்கூடது என்பதை வலியுறுத்தும் வகையில், தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இதுவரை வேட்புமனு தாக்கலுக்காகவே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறார். இந்த நிலையில் ஒட்டுக்கு பணம் வாங்கினால் இறுதிச்சடங்குதான் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தேர்தலில் 49 ஆவது முறையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய சுடுகாட்டில் இருந்து மண்பானையுடன் வந்தவர், 100 மீட்டருக்கு முன்பு உடைத்து ,பேரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், கோவை தெற்கு கோட்டாட்சியருமான மாருதி பிரியாவிடம்,தனது வேட்பு மனுவை
தாக்கல் செய்தார்.
எல்லோருக்கும் இறுதிச்சடங்கு சுடுகாட்டில் தான் நடக்கும், ஆனால் ஓட்டுக்கு பணம் வாங்கி, வாக்களித்தால், இறுதிச்சடங்கு வீட்டிலேயே நடக்கு என்பதை சுட்டிக்காட்டவே பானையுடன் வந்ததாக தெரிவித்த நூர் முகமது. கல்வி, மருத்துவம் இலவசமாக கொடுத்தாலே இந்தியா வல்லரசாக மாறும். அரசியல் கட்சிகள் கொடுக்கும் இலவசஙகள் வேண்டாம் என்றார். வருகின்ற தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.




