• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 10, 20 ரூபாய் என 25 ஆயிரத்துக்கு நாணயங்களை கொண்டு டெபாசிட் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர்

Byகதிரவன்

Mar 26, 2024

திருச்சி மாவட்டம் உறையூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியரான் இவர் கடந்த 20ஆம் தேதி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த பொழுது அதற்கு செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையில் டிஜிட்டல் பரிவர்த்தனம் மூலம் செலுத்துவேன் எனக் கூறி கழுத்தில் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை மாலையாக அணிந்து வந்தார். டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த முடியாது பணமாக செலுத்த வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலரான பிரதீப் குமார் அவரிடம் கூறி அனுப்பி வைத்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ராஜேந்திரன் பத்து ரூபாய் நாணயங்களை கொண்டு வந்தார். 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் விட்டிருந்த போதிலும் அதை மக்கள் பயன்படுத்த தயங்குகின்றனர் எனவே 10, 20 ரூபாய் என 25 ஆயிரத்து நாணயத்தை வைத்து டெபாசிட் தொகையை செலுத்துகிறேன் எனக்கூறி என்று பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து வந்து டெபாசிட் தொகையை கட்டினார்.