• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுற்றுச்சூழல் மாசடைவதைத் தடுக்க முன்மாதிரியாகத் திகழும் கலெக்டர்..!

Byவிஷா

Dec 27, 2021

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் திங்கள்கிழமை ஒருநாள் மட்டுமாவது அரசு அதிகாரிகள் வாகனங்களை பயன்படுத்தாமல் சைக்கிளிலோ, நடந்தோ அல்லது பொதுப் பேருந்திலோ அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நிலையில், மாவட்டக் கலெக்டர் ஒருவர் பேருந்தில் சென்று அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா இரண்டாவது வாரமாக இன்று தனது வீட்டிலிருந்து நடந்து பேருந்து நிறுத்தம் சென்றார். அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி கலெக்டர் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றார். சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்க கீழ நாஞ்சில்நாடு பகுதியில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து, அவர் 2 கிலோ மீட்டர் தூரம் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசுப் பேருந்தில் வந்தடைந்தார். அவர் மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத்திட்டத்தில் பயணம் செய்தார்.


பேருந்தில் நின்று கொண்டே பயணம் செய்த கலெக்டர் லலிதா, பொதுமக்களிடம் முக கவசம் அணிந்து வெளியில் வர அறிவுறுத்தினார். கீழ வீதி பஸ் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நடைபயணமாக வந்து சேர்ந்தார்.
மாவட்ட ஆட்சியரோடு ஆண் அதிகாரிகளும் இன்று ஆட்சியர் அலுவலகத்திற்கு அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து வந்தடைந்தனர்.