• Fri. May 3rd, 2024

மூன்றாக உடைந்தது அதிமுக, உடைத்தது டிடிவி தினகரன்- தங்கதமிழ்ச் செல்வன் பேட்டி

ByP.Thangapandi

Apr 8, 2024

முதல்வராக இருந்த ஒபிஎஸ் -யை அரட்டி ராஜினாமா கடிதம் வாங்கியதால் தான் மூன்றாக உடைந்தது அதிமுக. உடைத்தது டிடிவி தினகரன். இன்று மக்களை குளப்பவும், அதிமுகவை சின்னா பின்னமாக்க மட்டுமே தினகரன் தேர்தலில் நிற்கிறாரே தவிர வெற்றி பெற அல்ல. தினகரன் எனக்கு குருவும் இல்லை நான் அவருக்கு சிஷ்யனும் இல்லை. நட்டா இல்ல, யார் வந்தாலும் தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. உசிலம்பட்டியில் தேர்தல் பரப்புரையின் போது தங்கதமிழ்ச் செல்வன் பேட்டியளித்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தார்.

அப்போது உங்களது பக்கத்து ஊர்காரன், சொந்தக்காரன் எனக்கு வாக்களியுங்கள் உங்களுக்கான தேவைகளை நிறைவேற்றி தருவேன், நம்பலாமா, நிச்சயமாக பெட்டியை திறந்து பார்ப்பேன் ஏமாற்றி விடாதீர்கள் என பேசி வாக்கு சேகரித்தார்., தொடர்ந்து பொறுப்பு மேட்டுப்பட்டியில் அதிமுக கிளைச் செயலாளரின் தந்தை மறைவிற்கு பிரச்சார வாகனத்தில் இருந்தவாரே ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கதமிழ்ச் செல்வன்..,

செல்லம்பட்டி ஒன்றியத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறேன் மக்கள் எனக்கு அளிக்கும் வரவேற்பு மூலம் நான் வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்.,

நயினார் நாகேந்திரனின் பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து, எங்க பக்கம் எல்லாம் ஒரு லட்ச ரூபாயை பிடிந்தால் 108 இடங்களில் ரைடு செய்யும் வருமான வரித்துறை, அதே போன்று எல்லா இடங்களிலும் இதுக்கு மேல் எவ்வளவு பணம் இருக்கு என பிடித்தால் நல்லது என்பது தான் எங்களது எண்ணம்.

தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது நட்டா இல்ல, யார் வந்தாலும் இங்கு எடுபடாது, மத்தியில் ஆளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை, ஏழைகளுக்கு ஏதும் செய்யவில்லை, பணக்காரர்களுக்கான அரசாக பாஜக உள்ளது., ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டு மக்கள் பாஜக – வை புறக்கணிப்பார்கள்.

எனக்கு எதிராக போட்டியிடும் வேட்பாளர் பற்றி கேள்வி கேட்கவில்லை என கேட்ட தங்க தமிழ்ச்செல்வன். குருவும் கிடையாது சிஷ்யனும் கிடையாது. நான் தினகரனால் எம்எல்ஏ பதவியை இழந்தவன். அவருக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

ஒபிஎஸ், அம்மா இறக்கும் போது முதலவராக இருந்தார். எதற்கு கூப்பிட்டு அரட்டி ராஜினாமா கடிதம் வாங்கினார் தினகரன். வாங்கியதுமே கட்சி உடைந்தது. தர்ம யுத்தம் நடத்தினார் ஒபிஎஸ். தினகரன், பன்னீர் செல்வம், பழனிச்சாமி என மூன்று அணியாக மாறியது., மூன்றாக உடைத்தது தினகரன். சசிக்கலாவை முதலவராக ஆக்க வேண்டும் என நினைத்தார், முதல்வராக்க முடியவில்லை.

சசிக்கலாவை ஜெயிலுக்கு அனுப்பியது பாஜக அரசு, மோடி தான் அனுப்பினார். இரட்டை இலைக்கு பணம் கொடுத்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ளது. பணம் வாங்கியவர் இன்றும் திகார் சிறையில் உள்ளார். தினகரன் மட்டுமே வெளியே வந்துள்ளார். தள்ளியது பாஜக தானே, அப்போதெல்லாம் வீராப்பாக பேசிய தினகரன் இப்போது ஏன் பாஜக வுடன் சேர்ந்து தேனி தொகுதியில் நிற்கிறார். எந்த பலத்தில் அவர் வெற்றி பெற முடியும்.

நான் திமுகவில் நிற்கிறேன் என்னோடு 13 கட்சிகள் கூட்டணியில் உள்ளனர். முதல்வர் செய்த சாதனை என பலமாக நிற்கிறேன். 2004 ல் பலமான செல்வாக்கில் இருந்தவர் 28 ஆயிரம் ஓட்டில் தோல்வியுற்றார், இன்று எந்த நம்பிக்கையில் இங்கு நிற்கிறார் என புரியவில்லை.

மக்களை குளப்பவும், அதிமுகவை சின்னா பின்னமாக்கவும், பன்னீர் செல்வமும், தினகரனும் சேர்ந்து நாடகமாடுகின்றனர். இந்த தேர்தலில் சரியான தீர்ப்பை திமுகவிற்கு வாக்களித்து மிக பெரிய வெற்றியை தருவார்கள்.

குளப்புவதற்காகவே தேர்தலில் நிற்கின்றாரே தவிர வெற்றி பெற இல்லை.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் போது, அதிமுக இருக்கும் போது, தினகரன் செல்வாக்காக இருக்கும் போது, பல அமைச்சர்கள் ஆயிரம் ஆயிரம் கோடி கொடுத்து தேர்தலில் நின்ற போது 28 ஆயிரம் ஓட்டில் தோல்வியுற்ற தினகரன். இப்போது எந்த நம்பிக்கையில் வெற்றி பெற முடியும்.

பன்னீர் செல்வம் தெரு, தெருவிற்கு தர்ம யுத்தம் நடத்தும் போது சொன்னார், அம்மாவை கொன்றது தினகரனும், சசிக்கலாவும் தான் அந்த மர்மத்தை கண்டுபிடிப்பேன் என சொன்னார்.

நாங்கள் கொடநாட்டில் நடந்த கொலை கொள்ளை வழக்கு மீண்டும் எடுப்போம், அம்மாவின் மரணத்தில் மர்மம் இருந்தால் மக்களிடத்தில் எடுத்துச் சொல்வோம் என பேட்டியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *