• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்-னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்

ByKalamegam Viswanathan

Oct 4, 2024

நவராத்திரி விழாவையொட்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்-னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர், ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி பிரார்த்தனை செய்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள திருமண தகவல் மையம் நடத்திவரும் ரஜினியின் தீவிர ரசிகரான கார்த்திக் (49) கடந்த சில ஆண்டுகளாக ரஜினியின் உருவத்தில் கருங்கல்லினாலான உருவச் சிலை அமைத்து, மற்றும் அவருக்கு இல்லத்தில் அதற்கான தனி அறை அமைத்து, ரஜினி கோவில் என்ற பெயரில்,
நாள்தோறும் ரஜினிக்கு பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட 9 வகையான அபிஷேகங்கள் நடத்தி சிறப்பு பூஜை நடத்தி பூஜித்து வரும் நிலையில், தற்போது நவராத்திரி விழாவையொட்டி ரஜினியின் அபூர்வராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் உருவங்களை மரப்பலகையினாலும் களிமண்-னாலும் கொலு பொம்மைகளாக வடிவமைத்து, பொதுமக்களின் பார்வைக்காக வைத்துள்ளார்.
மேலும், ரஜினியின் உடல் பூரண குணமடைய வேண்டியும் பிரார்த்தனை செய்து வருவதாக கார்த்திக் தெரிவித்தார்.