• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

துரோக வரலாறு எனும் அமமுக போஸ்டர்..,

ByK Kaliraj

Sep 12, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, வெம்பக்கோட்டை, விஜயகரிசல் குளம், பகுதிகளில் விருதுநகர் மத்திய மாவட்ட அமமுக வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் எடப்பாடியாரின் துரோகங்களைப் பட்டியலிட்டு துரோக வரலாறு எனும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு முதலமைச்சர் பதவி கொடுத்த சின்னம்மாவுக்கு துரோகம்..

2018 ஆம் ஆண்டு துணைப் பொதுச் செயலாளர் டி டி வி தினகரனுக்கு துரோகம்
2021 ஆம் ஆண்டு 10.5% இட ஒதுக்கீடு வழங்குவதாக கோரி அன்புமணிக்கு துரோகம்
2022 ஆம் ஆண்டு நான்காண்டு முதல்வராக அமர்வதற்கு துணை புரிந்த கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு துரோகம் 2024 ஆம் ஆண்டு எம்பி பதவி தருவதாக பிரேமலதா விஜயகாந்த் க்கு துரோகம் 2025 ஆம் ஆண்டு அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கு துரோகம் என்று நீளும் பட்டியல் இறுதியாக 2026 துரோகம் யாருக்கு என்பதுடன் நிறைவடைகிறது.

விருதுநகர் மத்திய மாவட்டம் வம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம் என்று அச்சிடப்பட்டுள்ள இந்த நோட்டீஸ்ககள் பொதுமக்கள் அதிகம் கூடும் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.