• Fri. May 3rd, 2024

கழிவு நீரால் மாசடைந்து வரும் தேனி மாவட்டம் அம்மாபட்டி மீனாட்சி அம்மன் கண்மாய்

ByJeisriRam

Apr 20, 2024

தேனி மாவட்டம், மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி அம்மாபட்டி மீனாட்சி அம்மன் கண்மாய் கழிவு நீரால் மாசடைந்து வருகிறது.

போடி தாலுகா, அம்மாபட்டி ஊராட்சிக்கு சொந்தமான மீனாட்சி அம்மன் கண்மாய் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்த கன்மாயில் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி சாக்கடை கழிவுநீர், மனித கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், உள்ளிட்ட அனைத்து விதமான கழிவுகளும் வாய்க்கால் மூலம் அம்மாபட்டி மீனாட்சி அம்மன் கண்மாயில் வந்து சேர்கிறது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையினர், மாவட்ட நிர்வாகம் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகிறது.

எனவே அம்மாபட்டி மீனாட்சி அம்மன் கண்மாயை மாசுபடுத்தி வரும் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *