• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் அம்பேத்கார் நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

Byp Kumar

Dec 6, 2022

மதுரையில் சட்டமேதை அம்பேத்கார்66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
மதுரையில் சட்டமேதை அம்பேத்கார்66 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி மதுரை அவுட் போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் தமுக்கம் மைதானம் பகுதியிலிருந்து தொண்டரணி பரமசிவம் தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்திஉறுதிமொழி எடுத்துக் கொண்டனர் .
அதனை தொடர்ந்துநாம் தமிழர் கட்சியின் சார்பில்கிழக்கு தொகுதி செயலாளர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அதனைத் தொடர்ந்து ஐ ஜே கே கட்சியின் சார்பில் மாநில அமைப்பு செயலாளர் மாநகர் மாவட்ட செயலாளர் அன்னைஇருதயராஜ் ஞானசேகர் செந்தில்குமார் செந்தூர்பாண்டிஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் .மருதநாட்டு மக்கள் கட்சியின் சார்பில் தலைவர் ராஜ்குமார் தலைமையில் தொண்டர்கள் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் பா.காளிதாஸ், புறநகர் மாவட்டச் செயலாளர் பா.முத்துவேல், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராஜலெட்சுமி, மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் சார்பில்ஒருங்கிணைப்பாளர் லூயிஸ் மாவட்ட செயலாளர் திருமால்சாமி இளைஞரணி ஜெயிநூல் தொழில்நுட்ப அணி ராகுல் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் இதனை தொடர்ந்து பல்வேறு சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்