• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நாளை முதல் அமேசான் குடியரசு தின சிறப்பு விற்பனை..!

Byவிஷா

Jan 12, 2024

வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசானில் ‘ரிபப்ளிக் டே’ சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது.
ஒவ்வொரு வருடமும் அமேசான் நிறுவனமானது குடியரசு தினத்திற்கு சில நாட்களுக்கு முன்பாக தன்னுடைய தளத்தில் சிறப்பு விற்பனையை தொடங்கும். இதில் ஸ்மார்ட் போன், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட பல எலக்ட்ரானிக் பொருட்கள் பாதி விலைக்கு விற்பனை செய்யப்படும். அந்தவகையில் இந்த வருடம் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை முதல் விற்பனை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தன்னுடைய எக்ஸ் தளத்தில் அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. மற்ற விற்பனையை போலவே இந்த முறையில் அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஒரு நாளுக்கு முன்னதாகவே பெறலாம். எனவே அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இருந்தாலும் ஒரு நாள் முன்னதாகவே அனைத்து சலுகைகளையும் நீங்கள் பெற முடியும். இதில் ஸ்மார்ட்போன் மற்றும் அது சார்ந்த பொருட்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதேபோல, ஸ்மார்ட் டிவி உள்ளிட்ட பொருட்களுக்கு 65 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.