• Fri. May 3rd, 2024

பொங்கல்பண்டிகை சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்..!

Byவிஷா

Jan 12, 2024

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் விதமாக, அவரவரர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு வசதியாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொது மக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு முழுவதும் 19, 484 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 பஸ்களும், பிற இடங்களில் இருந்து 8,748 பஸ்களும் இயக்கப்பட உள்ளன. பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்பதால், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுக்கு எதுவாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மட்டும் சுமார் 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த பேருந்துகள் மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம், கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும். மேலும், பொங்கல் பொங்கல் முடிந்து ஊர் திரும்புவதற்கு ஏதுவாக, 17,589 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, மயிலாடுதுறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் குறித்து அறியவும், புகார் 14436 94450 14450 94450 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
பெங்களூர் செல்லும் எஸ்.சி.டி.சி, ஈசிஆர் வழியாக மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம் வேளாங்கண்ணி செல்கின்ற பேருந்துகள் கோயம்பேடு டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இவற்றை தவிர NH 45 வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் கிளம்பாக்கம், கலைஞர் நூற்றான்டு பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *