• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கருஞ்சீரகத்தின் அற்புதமான மருத்துவ குணங்கள்

Byவிஷா

Feb 6, 2025

கருஞ்சீரகம் இறப்பைத் தவிர அனைத்து நோய்களையும் குணமாக்க வல்லது என்பது நபிகள் நாயகத்தின் கூற்றாகும். அதே போல பைபிளிலும் கருஞ்சீரகம் பற்றிய குறிப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அரபு நாடுகளில் இதனை சமையலில் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர்.
கருஞ்சீரகம்… இந்த மூலிகைத் தாவரம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. சமஸ்கிருதத்தில் கிருஷ்ண ஜீரகா’,குஞ்சிகா’, உபகுஞ்சிகா’,உபகுஞ்சீரகா’ என்றும், ஆங்கிலத்தில் Black cumin’,Small Fennel’ என்றும், இந்தியில் காலாஜீரா’,கலோன்ஜி’ என்றும் சொல்வார்கள்.
கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள ஹதைமோகுயினன்’ என்ற நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய வேதிப்பொருள் வேறு எந்த பொருளிலும் இல்லை. மேலும் இது உடலில் சேரும் கெட்ட கொழுப்பை நீக்கி உடல் எடையை குறிக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல சத்துக்கள் இதில் உள்ளது. கருஞ்சசீரகம் எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி புற்றுநோய்க் கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். மேலும் ஆஸ்துமா, சுவாசப்பிரச்னைகள், இதயநோய் போன்றவை உடலை தாக்காமல் இருக்க உதவும்.
காலை எழுந்ததும் வெறும் வயிறில் கருஞ்சீரகப்பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் உடலில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் மலம், சிறுநீர் வியர்வை மூலம் வெளியேறும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீராகும். பெண்கள் மாதவிடாய் நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பு இருந்தே கருஞ்சீரகப் பொடியை நீரில் கலந்து குடித்து வந்தால் மாதவிடாய் சிக்கல்கள் சரியாகும். தோல் நோய் உள்ளவர்கள், சொரியாஸில், சிரங்கு போன்ற பிரச்னை உள்ளவர்கள் கருஞ்சீரகப்பொடியை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் விரைவில் குணமடைவதுடன் புண்கள் மற்றும் தழும்புகளும் மறையும்.
பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது உடல்நலத்துக்கு உத்தரவாதம் தரும்.