• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

அமர் ஜவான் ஜோதி தேசிய போர் நினைவு சின்னத்தில் இணைவு…

Byகாயத்ரி

Jan 21, 2022

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி என நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது.

இதேபோன்று இந்திய சுதந்திரத்திற்கு பின் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரில் இருந்து தற்போதுவரை நடைபெற்ற போர்களில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. இந்த போர் நினைவுச்சின்னத்தில் 1947 முதல் தற்போதுவரை நாட்டுக்காக உயிர்நீத்த 25,942 ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

இங்கும் அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அமர் ஜவான் நினைவிட ஜோதியானது, ராணுவ மரியாதையுடன் தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அங்கு அமர் ஜவான் ஜோதி ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.