உசிலம்பட்டியில் சக மாணவர்களுக்கும், பள்ளிக்கும் உதவ 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்த முன்னாள் மாணவர்களின் செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1973 – 74 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள்., இன்று 50 ஆண்டுகளுக்கு பின் நேரில் சந்தித்துக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, தேனி, சென்னை என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சுமார் 70க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் சக மாணவர்ளை சந்தித்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
மேலும் கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் இது போன்ற இணைப்பு நிகழ்ச்சி நடத்திய போது பெரிதாக யாரும் வரவில்லை என்றும் இன்று 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இல்ல விழாவில் கலந்து கொண்டுள்ளது போல இருந்தாக தெரிவிக்கின்றனர்.
மேலும் பள்ளியின் வளர்ச்சிக்கும் தங்களுடன் பயின்று வறுமையில் வாடும் சக முன்னாள் மாணவர்களுக்கும் உதவி செய்து அவர்களின் வாழ்வை மேற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்நிகழ்வை நடத்தியதாகவும், இன்னும் சில மாணவர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும், சில இறந்திருந்தாலும், 1974ல் தங்களுடன் பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைக்க முயற்சியும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.