• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மேலும் உயர்ந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை

ByA.Tamilselvan

May 19, 2022

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்து ரூ 1000த்தை தாண்டிய நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 7-ம் தேதி தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் கேஸ் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,015 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ரூ.3 உயர்ந்து ரூ.1,018க்கு விற்பனையாகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்து ரூ.2,507க்கு விற்பனையாகிறது. இதுவரையிலான நடப்பாண்டில் மட்டும் இதுவரை ரூ100க்கும் மேல்சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது.