வெள்ளப்பெருக்கால் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இன்று மாவட்ட நிர்வாகம் சார்பாக அருவிகளில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. அதனால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க காணப்படும் என்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்காலிகமாக அந்த இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது ஆனால் தற்போது மழையின் அளவு குறைந்ததால் அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் சீராக உள்ளது.
அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது. காலை முதலே ஏராளமானோர் குற்றாலத்தில் குவிந்து வருகின்றனர்.
கடந்த தீபாவளி தொடர் விடுமுறையின் பொழுது ஏராளமான குற்றாலத்தில் குவிந்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால் ஒரு சில தினங்களில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் இந்நிலையில் தற்போது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் சுற்றுலா பணிகளின் கூட்டம் அலைமோதி காணப்படுகின்றது.
குற்றாலத்தில் குளிக்க அனுமதி
