• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி -அன்புமணி ராமதாஸ் பேட்டி

Byp Kumar

Apr 26, 2023

நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் கூட்டணி குறித்து 2024 இல் முடிவு செய்யப்படும் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி.
தென் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர் பிரச்சினையாக உள்ளது.காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்தால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும்.கடந்த ஆண்டு வீணாக 640 DMC தண்ணீர் கடலுக்கு செல்லும் நீரை திருப்பி விட வேண்டும்.காவிரி குண்டாறு இணைப்பில் புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மதுரை விருதுநகர் மாவட்டங்கள் பயன்பெறும்.நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆற்று இணைப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.தூத்துக்குடி முறப்பநாடு பகுதியில் மணல் மாஃபியா கும்பலால் கொலை செய்யப்பட்ட பிரான்சிஸ் வழக்கை முறைப்படுத்தி விசாரணை செய்ய வேண்டும்.தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை மூட வேண்டும் .மணல் நமது பொக்கிஷம் அதனை பாதுகாக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சட்டமன்றத்தில் விவாதிக்காமல் நிறைவேற்றப்பட்ட 15 திருமாங்கலில் திருமண மண்டபம் விளையாட்டு திடல் போன்றவற்றில் மதுபான கடைகள் திறக்க அனுமதித்ததை வன்மையாக கண்டிக்கிறோம் இதனை அரசு தடுக்க வேண்டும்.12 மணி நேர வேலை என்பது மிகவும் கடினமானது 12 மணி நேர வேலை ஆறு மணி நேரம் தூக்கம் 2 மணி நேரம் போக்குவரத்து செலவு என செய்தால் குடும்பத்தை பார்ப்பது எப்படிதனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக 100 கோடி 100 ஏக்கருக்கு மேல் உள்ள நிலங்கள் வைத்திருப்பவர்கள் நீர்நிலை நீர்நிலைகளை தானாகவே பராமரித்துக் கொள்ளலாம் என கூறி உள்ளது தனியார்களுக்கு சாதகமான மசோதா இதனை அரசு நீக்க வேண்டும்
அரசு மக்களுக்கான அரசுக இல்லாமல் தனியாருக்கான அரசாக உள்ளது.தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் அண்ணாவின் நிலைப்பாட்டை அரசு உறுதி செய்ய வேண்டும்.நாடாளுமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் கூட்டணி குறித்து 2024 இல் முடிவு செய்யப்படும்.2026ல்நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் ஒருமித்த கருத்துகளுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க வியூகம் அமைப்போம் .என அன்புமணி ராமதாஸ் கூறினார்.