• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

திமுக சார்பில் நலத்திட்டம் வழங்கியதில் பாரபட்சம் காட்டியதாக குற்றச்சாட்டு..,

ByKalamegam Viswanathan

Dec 11, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது

அதன்படி நேற்று காலை அதாவது இன்று சோழவந்தான் பேரூராட்சி தெற்கு தெரு பகுதியில் 10 முதல் 18 வரை உள்ள வார்டுகளுக்கு முதல் கட்டமாக டிபன் பாக்ஸ் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது..

அதன்படி காலை 9 வார்டுகளுக்கான பொதுமக்களுக்கு அதாவது திமுகவினருக்கு நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.

இதில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகளின் வார்டுகள் உள்ள நிலையில் அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சமூகமாக மதியம் ஒரு மணி வரை நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது.

பின்னர் 1 முதல் 9 வார்டுகள் வரை உள்ள திமுகவினருக்கு சோழவந்தான் எட்டாவது வார்டு பகுதியான இரட்டை அக்ரகாரம் பகுதியில் டிபன் பாக்ஸ் வழங்குவதற்கான மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து சம்பந்தப்பட்ட வார்டு உட்பட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் திமுகவினருக்கு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி மாலை 5 மணிக்கு இரண்டாவது தவணையாக டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது சுமார் 2 மணி நேரம் சோழவந்தான் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் டிபன் பாக்ஸ் வழங்கிய நிலையில்

காலையில் 10 முதல் 18 வார்டுகளில் டிபன் பாக்ஸ் பெறாதவர்கள் மற்றும் ஏற்கனவே பெற்றவர்கள் என தங்களின் ஆதரவாளர்களுக்கு திமுகவினர் மறுபடியும் டோக்கன் கொடுத்து மாலை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் என்ற பெயரில் டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சிக்கு வரவழைத்ததாக கூறப்படுகிறது.

அவ்வாறு வந்தவர்கள் சோழவந்தான் பேரூராட்சி எட்டாவது வார்டு பகுதியில் நடைபெற்ற டிபன் பாக்ஸ் நிகழ்ச்சியில் முன்கூட்டியே வந்து மீண்டும் டிபன் பாக்ஸ் வாங்கி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஏற்கனவே வாங்கி சென்றவர்கள் அதிக பேர் வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை தவிர்த்து விட்டு வாங்காதவர்களுக்கு கொடுக்கவும் என ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டே இருந்தார்.

ஆனால் இது எதையும் கண்டுகொள்ளாத திமுகவினர் மீண்டும் மீண்டும் டிபன் பாக்ஸ் வாங்குவதிலேயே குறிக்கோளாக இருந்தனர்

இதனால் பேரூராட்சிக்கு உட்பட்ட ஒன்று மற்றும் இரண்டாவது வார்டில் டோக்கன் பெற்ற பொதுமக்கள் டிபன் பாக்ஸ் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் டிபன் பாக்ஸ் பற்றாக்குறை ஏற்படும் நிலை தெரிந்த சோழவந்தான் திமுக எம்எல்ஏ வெங்கடேசன் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டோக்கனுடன் காத்திருந்த நிலையில் நிகழ்ச்சியை பாதியில் முடித்து மேடையின் பின்புறமாக வெளியேறி சென்றதாக தெரிய வருகிறது.

பின்னர் அங்கிருந்த நிர்வாகிகள் ஒரு வழியாக சமாளித்து டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினர்.

ஆனால் போதிய அளவில் டிபன் பாக்ஸ் இல்லாததால் சோழவந்தான் பேரூராட்சியில் ஒன்று மற்றும் இரண்டாவது வார்டு பொதுமக்கள் ஏமாற்றமடைந்து எம்எல்ஏ வை திட்டி தீர்த்தனர்.

அதில் அங்கிருந்த பொதுமக்கள் டிபன் பாக்ஸ் தற்போது கொடுக்காமல் சென்றால் விட்டு விடுவோம் அடுத்து ஓட்டு கேட்டு வார்டுக்கு வரும்போது இரண்டு கைகளையும் கும்பிட்டு ஓட்டு கேட்டு வருவார்கள் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என கோபத்துடனும் ஏமாற்றத்துடன் அங்கிருந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் கிளம்பிச் சென்றனர்.

சோழவந்தான் பேரூராட்சியின் ஒன்று மற்றும் இரண்டாவது வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சிக்கு எதிராகவும் பேரூராட்சி தலைவருக்கு எதிராகவும் சோழவந்தான் சட்டமன்ற திமுக எம்எல்ஏ வெங்கடேசனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் அந்த வார்டுகளில் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலருக்கு அவப்பெயர்களை ஏற்படுத்த வேண்டும். அடுத்து வரும் தேர்தலில் அவர்களுக்கான ஆதரவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டு செயல்படுவதாக அந்த பகுதி வார்டு பொதுமக்கள் கூறிச் சென்றனர்.

சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் டிபன் பாக்ஸை திமுக வெங்கடேசன் எம் எல் ஏ கடைசிவரை இருந்து கொடுத்துவிட்டு சென்ற நிலையில் சோழவந்தான் பேரூராட்சியில் மட்டும் நிகழ்ச்சியின் பாதியிலேயே கிளம்பி சென்றது. அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தையும் அதிருப்தியும் ஏற்படுத்தியது.

தொடர்ச்சியாக சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளை புறக்கணித்து வரும் திமுக எம்எல்ஏ வெங்கடேசனுக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவோம் மற்றும் திமுக சார்பில் நிறுத்தும் வேட்பாளர் எங்கள் பகுதியில் ஓட்டு கேட்டு வரும் போது இதற்கான எதிர்ப்பை பதிவு செய்வோம் என அங்கிருந்த பொதுமக்கள் கூறிச் சென்றனர்.