• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆல் ஷோ ஹவுஸ் புல்! – வலிமை பீவர் ஆன்!

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வலிமை’ திரைப்படம் பிப்., 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் சிறப்புக் காட்சிகள் ஒரு நாள் முன்னாதாக பிப். 23 அன்று வெளியாக இருக்கிறது.

இரண்டரை ஆண்டுகள் கழித்து அஜித் திரைப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 700 திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் முன்பதிவு துவங்கிய இடங்களில் எல்லாம் முதல் நாள் காட்சிகள் அனைத்துக்கும் டிக்கெட்டுகள் தற்போதே விற்றுத் தீர்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் உள்ள திரையரங்குகளில் ஹவுஸ் புல் என்ற அறிவிப்பு தொங்க விடப்பட்டுள்ளன. அஜித் நடிப்பில் முதல் முறையாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று நான்கு மொழிகளில் வலிமை ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் பிப்., 24 அன்று ரிலீசாகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள உலகின் மிகப்பெரிய திரையரங்கில் பார்க்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.