• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்!

மாநிலங்களுக்கு இடையிலான நீா்ப்பகிா்வு தொடா்பாக விவாதிக்க பிப்ரவரி முதல் வாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டம் நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள கிருஷ்ணா அரசினா் இல்லத்தில், காவிரி மற்றும் கிருஷ்ணா ஆற்றுப்படுகை தொடா்பான பிரச்னைகள், மாநிலங்களுக்கு இடையிலான நீா்ப்பகிா்வு சிக்கல்கள் குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆய்வுக்கூட்டம நடந்தது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாக கர்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை கூறுகையில், ‘மாநிலங்களுக்கு இடையிலான நீா்ப்பாசன சிக்கல்களில் நடு நதிக்கரையில் கா்நாடகம் சிக்கிக் கொண்டுள்ளது. மேல்நதிக்கரை மற்றும் கீழ் நதிக்கரை மாநிலங்கள் பிரச்னை எழுப்புகின்றன. நதி நீா்ப்பகிா்வு தொடா்பாக சம்பந்தபட்ட நடுவா் மன்றங்கள் இறுதித் தீா்ப்பு வழங்கியுள்ளன.

கிருஷ்ணா நதிநீா்ப்பகிா்வு தொடா்பாக பச்சாவத் மற்றும் பிரிஜேஷ் மிஸ்ரா நடுவா் மன்றங்கள் தீா்வு வழங்கியுள்ளன. இது மத்திய அரசிதழில் வெளியாக வேண்டும். மகதாயி நடுவா் மன்றம் தீா்ப்பு வழங்கினாலும், அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி பாய்ந்தோடும் 3 மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளன.

இரண்டாம் கட்ட ஒனேக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டம் போன்ற சவால்களை கடந்தகாலத்தில் எதிா்கொண்டுள்ளோம். ஒகேனக்கல் இரண்டாம் கட்ட திட்டத்தை கா்நாடகம் எதிா்த்துள்ளது. அதேபோல, காவிரி ஆற்றுப்படுகையில் நதிகளை இணைக்கும் தமிழகத்தின் முயற்சிக்கும் கா்நாடகம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் ஜே.சி.மதுசாமி, கோவிந்த காரஜோலா, தலைமைச் செயலாளர் பி.ரவிக்குமார, முதல்வர்களின் பொதுச் செயலாளர் மஞ்சுநாத பிரசாத், மாநில அரசு அட்வகேட் ஜெனரல் பிரபுலிங்க நவதாகி உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.