• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகம் முழுவதும் சேவைக்கட்டணம் அதிரடி உயர்வு..!

Byவிஷா

Oct 17, 2023

ஓலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் இரண்டாவது நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருவதால், தமிழகம் முழுவதும் சேவைக்கட்டணம் அதிரடியாக ரூ.120 உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ஒலா, ஊபர் டாக்ஸி ஓட்டுநர்கள் கட்டண உயர்வு, கமிஷன்தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் சேவைக்கட்டணம் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக ரூ.120 வரை உயர்ந்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேவைக்கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.