• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா..!

Byஜெ.துரை

Jan 14, 2024

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் முப்பெரும் விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர்கள் புதிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி ரியல் எஸ்டேட் துறையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா 2023 ஆம் ஆண்டின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா 2024 ஆம் ஆண்டின் மாதாந்திர நாட்காட்டி மற்றும் நாட்குறிப்பு வெளியீட்டு விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றதாக தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு பத்திரப்பதிவு துறையில் ஏற்பட்டுள்ள முரண்பாடான விலை உயர்வை முறைப்படுத்த வேண்டும். பத்திரப்பதிவுத்துறையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வால் ரியல் எஸ்டேட் துறை கடுமையான பாதிப்புகளை சந்தித்திருப்பதாகவும், இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு 50% அளவு பத்திரப்பதிவு குறைந்துள்ளது இதற்கு சான்று என கூறினார்.

எனவே இதனை தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைப்பதாக தெரிவித்தார்.