• Thu. May 2nd, 2024

கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 530 ஓட்டுகள் காணவில்லை

BySeenu

Apr 19, 2024

கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 530 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டு 22க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இதில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அதன் கட்சித் தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இந்த நிலையில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டு உள்ளது. கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 1353 ஓட்டுக்கள் இருந்த நிலையில், தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளன. இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டனர். மேலும், இது ஒவ்வோரு வாக்காளர் எண்ணையும் மொபைலில் ஐடியை வைத்து செக் பண்ணும் போது, அதில் அந்த எண்கள் இல்லை என்றே வருகிறது என்று அதிகாரிகளிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலையில் உட்கார்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். அதற்குள் காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக அதிகப்படுத்தியுள்ளனர். ஒரு மணி நேரமாக எந்த நடவடிக்கையும் திறல் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று கூறி, பிஜேபி கட்சியினர் தரையில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் நேரில் வந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். பேச்சுவார்த்தை முடிவில் ஓட்டு போட அனுமதி மறுக்கப்பட்டவர்கள் அனைவரும் புகார் மனு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கொடுத்து இந்த பூத்தில் மறுவாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *